ரெட்டியார் என்றால் என்ன?
சுதந்திர இந்தியாவிற்கு முன்னும் பின்னும் இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்ட சமூகங்கள் இருந்தபோதிலும், வரலாற்றாசிரியர்கள் ரெட்டியார் சமூகத்தை ஒரு குறிப்பிட்ட சமூகமாக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்களின் கணிப்பில், ரெட்டியார் என்பது ஒரு ஜாதி அல்ல, ரெட்டியார் என்றால் தைரியம், முன்முயற்சி, தலைமை பண்பு மற்றும் பாரத கலாச்சாரத்தின் சொந்தக்காரர்கள் என்று எழுதுயுள்ளார்கள்.
தோற்றம்
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் ரெட்டியர் சமூகம் ரெட்டியர் சமூகம் நில உரிமையாளர்களாகவும் மற்றும் வணிகர்களாகவும் விவசாயிகளாகவும் சமூகக்குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள். ரெட்டியார் ரெட்டி + ஆர் ரெட்டியார்என்றும் அழைக்கப்படுகிறார் ரெட்டியார், ரெட்டி மற்றும் ரெட்டப்பா ஒரே பூர்வீகத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பரவியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் தமிழ் நாட்டில் பல பகுதியில் உள்ள உள்ளூர் கோயில்களின் தர்மகர்தாக்களாகவும் நிதியளிப்பவர்களாகவும், உள்ளூர் கிரம தலைவர்கள் ஆவார்கள்.. . ரெட்டியார் என்ற பெயர் அவர்கள் வாழ்ந்த பகுதிகளின் அடிப்படையில் பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரெட்டிஎன்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் ரெட்டியார் (ரெட்டி + ஆர்). ரெட்டி, ரெட்டப்பா (ரெட்டி + அப்பா - மரியாதையைக் குறிக்கிறது)
ஆந்திராவில் இருந்து விவசாயத்திற்கு வளமான நிலம் தேடி ஏராளமான ரெட்டியர்கள் குடிபெயர்ந்து பாண்டிச்சேரியிலும், விஜயநகரப் பேரரசின் போது தமிழ்நாட்டில் உள்ள கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி ஆகிய வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் குடியேறினர். (இந்திய மக்கள்/இந்திய சமூகங்களில், Oxford Univ. Press)
ரெட்டிகள்/ரெட்டியார்களின் குடியேற்றம் தமிழ்நாட்டிற்கு ரெட்டி வம்சம் காஞ்சிபுரம் பகுதிகளில் பரவியபோது நடந்ததாகக் கருதப்படுகிறது
ரெட்டியார் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறித்தி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, மதுரை நகர். திருநெல்வேலி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ரெட்டியார் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார் சமுதாயத்தின் தோற்றம்.
ரெட்டி வம்சத்தின் அனவோத ரெட்டி (கி.பி. 1335-1364) வடக்கே ராஜமுந்திரி, தெற்கில் காஞ்சி மற்றும் மேற்கில் ஸ்ரீசைலம் வரை ராஜ்யத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார். 14 ஆம் நூற்றாண்டில், ரெட்டியபுரம் இராணுவம் வள்ளியூர் போரில் திருவிதாங்கூர் இராணுவத்தை தோற்கடித்தது.[2] வள்ளியூர் முருகன் கோவிலின் நுழைவாயிலில் உள்ள தகவல் பலகையில் 14ம் நூற்றாண்டில் நடந்த வள்ளியூர் போரில் திருவிதாங்கூர் ராணுவத்தை ரெட்டியபுரம் ராணுவம் தோற்கடித்தாக பதிவு செய்யப்பட்டது. இந்தப் போருக்குப் பிறகு 14 ஆம் நூற்றாண்டில் ரெட்டியார்கள் சமூகரங்கபுரம், சீலாத்திக்குளம் மற்றும் திருநெல்வேலி பகுதி முழுவதும் குடியேறினர்.[சான்று ]. தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் கோவிலில் உள்ள ஒரு சுவரோவியம், விஜயநகர மன்னர் அச்யுததேவ ராயரின் தூதர்கள் திருவிதாங்கூர் ஆட்சியாளர் பூதலா வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கு பாண்டிய பிரதேசத்தை ஸ்ரீ வல்லபரிடம் திருப்பித் தருமாறு இறுதி எச்சரிக்கை விடுத்ததைக் காட்டுகிறது. இது அச்யுததேவ ராயா மற்றும் பூதால வர்மாவின் படைகளுக்கு இடையிலான போரையும் சித்தரிக்கிறது. மதுரையை ] இஸ்லாமிய ஆட்சியிலிருந்தும் விஜயநகரப் பேரரசின் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதற்காக விஜயநகரப் பேரரசர் குமார கம்பனுடன் சேர்ந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர்.
கேரள ரெட்டியார்களின் வரலாறு.
குறிப்பாக 1870 மற்றும் 1880 களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பஞ்சங்கள் தலைவிரித்து ஆடியது
இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிக அதிகமாக இருந்த்து.. அந்தக் காலத்தில் சமூகரெங்கபுரம், நக்கநேரி,சீலாத்திக்குளம் பருத்திப்பாடு கிரமங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த ரெட்டியார் சமூகம் பஞ்சத்தின் கரணமாக திருவனந்தபுரத்திலும், கொல்லத்திலும்,ஆழப்புழையிலும் குழுக்களாக குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் ஜவுளி வியாபாரம், ஹோட்டல் தொழிலாளிகளகவும் மற்றும் பல தொழில்கள் நடத்தி வாழ்ந்தார்கள்
1921 கொல்லம் பள்ளித்தோட்டம் வார்டு ஏ.என்.கே. ரங்கநாத ரெட்டியார் மாதசிட்டியைத் தொடங்கினார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
1986 இல், சுப்பையா ரெட்டியார் கொல்லம் (ST.Reddiar & Sons) என்ற அச்சகத்தைத் தொடங்கி, பனை ஓலைகளில் எழுதப்பட்ட மலையாள காவியங்களை புத்தகங்களாக வெளியிட்டார். இவரது சேவைகளுக்காக திருவிதாங்கூர் மகாராஜாவால் கவுரவிக்கப்பட்டார்
N.A நாராயணசுவமி ரெட்டியார் 1896 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரங்கபுரத்தில் பிறந்தார். NANR கொல்லம் பட்டினத்தில் பலசரக்கு வியாபாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1940க்குப் பிறகு முந்திரித் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.. முந்திரிப்பருப்பு லாபகரமான நிறுவனம் என்று தனது அனுபவத்தில் புரிந்து கொண்டு, கெல்லத்தில் சற்றியுள்ள கிராமங்களில் 20 க்கும் மெற்பட்ட முந்திரி பருப்பு தெழிற்சாலைகள் நிறுவி 1000 க்கும் மேற்பட்ட மலையாள பெண்களுக்கு வேலை கொடுத்து கொல்லத்தில் சிறந்த வியபாரியாக பெயர் பெற்றார்.